மெட்ரோ ரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு

மெட்ரோ ரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு

1 mins read
5c4e25f4-b70c-45c8-b0aa-54f6a734f06e
-

சென்னை: சென்னையில் இரண்டா வது வழித்தடத்தில் தொடங்கப்பட் டுள்ள மெட்ரோ ரயில் சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வர வேற்பு கிடைத்து வருகிறது. இப்புதிய வழித்தடத்தில் சுரங்கப் பாதை வழியே மெட்ரோ ரயில் செல்வதால், அதில் பயணம் மேற்கொள்ள சிறுவர்கள், இளை யர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினருமே மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இதையடுத்து இச்சேவை தொடங்கப்பட்டது முதல் இப்போது வரை தினமும் நூற்றுக்கணக்கா னோர் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ரயில் கட்டணம் அதிகமாக உள்ளது என்றும், மாதாந்திர பயணச் சீட்டுக் கட்ட ணத்தைக் குறைக்க வேண்டும் எனவும் தினமும் இச்சேவையைப் பயன்படுத்துவோர் வலியுறுத்தி உள்ளனர். திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தின் முன் மக்கள் கூட்டம். படம்: சதீஷ்