சாலைகளில் தமிழக அரசுப் போக்கு வரத்துக் கழகப் பேருந்துகள் ஏற் படுத்திய விபத்துகளில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தாருக்கும் காயமடைந்தவர்களுக்கும் சேர வேண்டிய 280 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக் கும் மேலாக அரசுப் பேருந்துகள் ஏற்படுத்திய சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட சுமார் 9,100 பேருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை மதுரை, கோவை, சேலம், கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள் இன்னும் வழங்கவில்லை. இந்த நான்கு கோட்டங்களில் இயங்கும் அரசுப் பேருந்துகள் 37,522 விபத்துகளை ஏற்படுத்திய தாகவும் அவற்றால் 7,103 பேர் உயிரிழந்ததாகவும் அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
விபத்துகளில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு தராமல் காலந்தாழ்த்தி வரும் தமிழக அரசு
1 mins read

