புதுடெல்லி: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து புதிதாக 91 லட்சம் பேர், வரி வரம்புக்குள் வந்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதை யடுத்து, புதிதாக 91 லட்சம் பேர், வரி வரம்புக்குள் வந்து இருப்ப தாக அருண் ஜெட்லி தெரி வித்தார். கறுப்புப் பண சொத்துகளைத் தெரிவிக்கும் திட்டம் தொடர்பான இணையத்தளத்தை நேற்று அவர் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், "வரி கணக்கைத் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கருதுகிறேன்.
"செல்லாத நோட்டு அறிவிப் பால் கணக்கில் காட்டப்படாத பணம் மறைந்து போய்விட்டது. அத்துடன் மின்னணு பரிமாற்றம் அதிகரித்து உள்ளதுடன் ரொக்கத்தைப் பயன்படுத்து வதற்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. "செல்லாத நோட்டு அறிவிப் புக்குப் பிறகு, தனிநபர் வருமான வரி வசூலும் அதிகரித்துள்ளது," என்று கூறினார். செல்லாத நோட்டு அறிவிப்புக் குப் பிறகு இணையத்தளத்தில் வரி கணக்குத் தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை 22 விழுக்காடு அதிகரித்து இருப்பதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்தார். வங்கியில் அதிகமான கறுப்புப் பணத்தை செலுத்திய வர்களில் 17 லட்சத்து 92 ஆயிரம் பேர் அடையாளம் காணப் பட்டுள்ளதாகவும் கணக்கில் காட்டப்படாத ரூ.16 ஆயிரத்து 398 கோடி வருவாய் கண்டறியப் பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

