அமலாக்க இயக்குநரகம் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் என எதிர்பார்க் கப்படும் வேளையில் அவர் திடீரென லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீட்டு அனுமதி பெற்றுத்தர லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் தொடர்பில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் கார்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்படக்கூடும் என இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டிருந்தது. சிபிஐயிடமிருந்து முதல் தகவல் அறிக்கையையும் லஞ்ச ஊழல் தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்றை யும் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைவில் தங்களது தரப்பிலிருந்து வழக்கு பதிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டனர்.
விரைவில் அமலாக்கப் பிரிவு வழக்கு; லண்டன் சென்றார் கார்த்தி சிதம்பரம்
1 mins read
-

