நெல்லை: உலகம் முழுவதும் கணினி கட்டமைப்புகளைப் பாதித்து வரும் 'ரேன்சம்வேர்' வகையைச் சேர்ந்த 'வான்னக்ரை' வைரசை சரிசெய்வது குறித்து நெல் லையைச் சேர்ந்த சிறுமி விஷாலி னியிடம் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் விவாதித் தனர். நெல்லை கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதியின் ஒரே மகள் விஷாலினி, 16. சிறு வயதி லேயே, மைக்ரோசாப்ட், சிஸ்கோ போன்ற நிறுவனங்களின் தேர்வு களை எழுதி வெற்றிபெற்றவர்.
9ம் வகுப்பு படித்த பின்னர் தற்போது பல்கலைக்கழகம் ஒன்றில் தகவல் தொழில்நுட்பத்தில் பி.டெக். இரண் டாம் ஆண்டு பயின்று வருகிறார். 'வான்னக்ரை' வைரஸ் பாதித்த கணினிகளைச் சரிசெய்வது குறித்த ஆய்வில் தாம் ஈடுபட்டு உள்ளதாக விஷாலினி தெரிவித் திருந்தார். இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வைரஸ் பாதித்த கணினிகளைச் சரிசெய்து தரு மாறும் அதற்கு என்னென்ன உப கரணங்கள், உதவிகள் தேவை எனவும் விஷாலினியிடம் கேட் டுள்ளார்.

