சாங்கி விமான நிலையத்தில் போலிசுடன் சச்சரவில் ஈடுபட்ட ஆஸ்திரேலியர் இன்னும் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் போலிசுடன் சச்சரவில் ஈடுபட்ட சம்பவம் தொடர் பான இரண்டு காணொளி- கள் பலரால் பகிர்ந்துகொள்ளப் பட்டுள்ளன. ஜேசன் பீட்டர் டாராக் என்ற 44 வயது ஆஸ்திரேலிய ஆடவர் அவர் சார்பில் வாதாடும் வழக்- கறிஞர் எஸ்.எஸ்.தில்லனுடன் நேற்றுக் காலை நீதிமன்றத்தில் முன்னிலையானார். அவரது சகோதரி, மைத்துனர் ஆகியோரு- டனும் ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரி ஒருவருடனும் அவர் காணப்பட்டார். அந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேச அவர் மறுத்துவிட்டதாகக் கூறப் படுகிறது. சாங்கி சிறைச்சாலைக் கட்டடத்- தின் மருத்துவ நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவ- ருக்கு $20,000 வெள்ளி பிணை வழங்கப்பட்டுள்ளது. அவருக்குப் பிணை வழங்குபவர்கள் சிங்கப்பூர- ராக இருக்கவேண்டும். கடந்த மே 13ஆம் தேதி நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் மீது மொத்தம் 11 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
போலிஸ்காரர்களைத் தாக்கிய ஆஸ்திரேலிய ஆடவர் மீது 11 குற்றச்சாட்டுகள்
1 mins read

