ஜி.கே.வாசன்: தமிழகத்தில் உடனே பத்திரப் பதிவைத் தொடங்க வேண்டும்

ஜி.கே.வாசன்: தமிழகத்தில் உடனே பத்திரப் பதிவைத் தொடங்க வேண்டும்

1 mins read

சென்னை: பத்திரப் பதிவுக்கு உள்ள தடையை நீக்கி உயர் நீதி மன்றம் உத்தர பிறப்பித்தும் பத்திரப் பதிவை நடைமுறைப் படுத்தாமல் இருப்பது தமிழக அரசின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்தும் செயல் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் சாடியுள்ளார். தமிழக அரசின் பத்திரப்பதிவு முறையில் இருந்த முரண்பாடான கோட்பாடுகளால் கடந்த சில ஆண்டுகளாக லட்சக்கணக்கான மனைகளைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது பத்திரப்பதிவு சம்பந்தமாக தமிழக அரசின் அரசாணைகளில் முறையான, சரியான கோட்பாடுகள் இல்லாத காரணத்தால் மீண்டும் லட்சக்கணக்கான மனைகளைப் பத்திரப்பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் பத்திரப் பதிவுகள் அனைத்தும் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட் டுள் ளதற்கு உட்பட்டவை என்பதால் அதற்கேற்ப நடவடிக் கையை உடனடியாக எடுத்துப் பத்திரப் பதிவுத் துறையை செயல்படுத்த வேண்டும்," என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.