சிவகங்கை: தந்தை காலமான பிறகும் அவரது இறப்பு குறித்து அரசுத் தரப்புக்குத் தகவல் தராமல், தந்தையின் ஓய்வூதியப் பணத்தைப் பெற்று வந்த மகன் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த சலுகைசாமி விவசாயக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2015ல் அவர் காலமானார். ஆனால் இதுகுறித்து அரசின் கருவூலத் துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் ரூ.1.02 லட்சம் அளவுக்கு சலுகைசாமியின் ஓய்வூதியத்தை அவரது மகன் உதயசங்கர் மாதந்தோறும் பெற்று வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கருவூலக அலுவலர் ராமலட்சுமி அளித்த புகாரின் பேரில் உதய்சங்கர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
தந்தை இறந்தபிறகும் ஓய்வூதியம் பெற்று வந்த மகன் மீது வழக்கு
1 mins read

