நடிகர் ரஜினி வீட்டின் முன் தமிழர் முன்னேற்றப்படை கொடும்பாவி எரிப்பு

நடிகர் ரஜினி வீட்டின் முன் தமிழர் முன்னேற்றப்படை கொடும்பாவி எரிப்பு

1 mins read
6d0d1d94-5649-4217-9821-44dc6e191784
-

சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். தமிழர்கள் கீழ்த்தரமாக நடந்துகொள்வதாக ரஜினிகாந்த் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து இப்போராட்டம் நடைபெற்றதாக அந்த அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி தெரிவித்தார். ரஜினிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய அவரது அமைப்பினர், பின்னர் ரஜினியின் கொடும்பாவியை எரித்தபோது கைதாகினர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. படம்: தகவல் ஊடகம்