விபத்தில் சிக்கிய இரு இளையர்கள்: உதவிக்கரம் நீட்டிய கனிமொழி

விபத்தில் சிக்கிய இரு இளையர்கள்: உதவிக்கரம் நீட்டிய கனிமொழி

1 mins read
5c9bc435-e278-40eb-bc94-d7638f753630
-

சென்னை: விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை ஆண்டிப்பட்டி மக்கள் பாராட்டினர். நேற்று முன்தினம் மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார் கனிமொழி. அப்போது தேனியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளையர்கள் இருவர், டிராக்டர் வண்டி மீது மோதியதில் படுகாயமடைந்தனர். இந்த விபத்தைக் கண்ட கனிமொழி, தன் காரை நிறுத்தி உயிருக்குப் போராடிய இருவரையும், கட்சி நிர்வாகிகள் உதவியுடன் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அதன் பின்னரே அவர் மதுரை புறப்பட்டுச் சென்றார்.