மொட்டை போட்டுக்கொண்டு மோடியை எதிர்க்கும் குஜராத் மக்கள்

மொட்டை போட்டுக்கொண்டு மோடியை எதிர்க்கும் குஜராத் மக்கள்

1 mins read
def9078b-494f-4068-b63e-e957d861024a
-

அகமதாபாத்: பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹர்திக் பட்டேல் தலைமையிலான குழுவினர் மொட்டை அடித்துக்கொண்டனர். குஜராத் மாநிலத்தில் வாழும் பட்டேல் சமூகத்தினர், தங்களை ஓபிசி பிரிவில் சேர்க்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின் றனர். இதுதொடர்பாக பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்டு வன்முறையில் முடிந்துள்ளன. அவர்களுக்கு ஹர்திக் பட்டேல், 23, என்ற இளைஞர் தலைமை தாங்கி, போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு இருநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ளார்.

இந்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்குக் விதத்தில் 'பட்டிதர் அனாமத் அன்டோலன் சமிதி' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் 50 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். கடந்த இரு ஆண்டுகளாக மாநில அரசு தங்கள் மீது செலுத்தி வரும் வன்முறைகளை வெளிப் படுத்தும் வகையில் இவ்வாறு மொட்டை அடித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். விரைவில் தங்கள் சமூகத்தின ருடன் பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினர். அண்மையில் செய்தியாளர்களி டம் பேசிய ஹர்திக் பட்டேல், "வரும் பொதுத் தேர்தலில் பாஜக அரசை தோற் கடிக்கச் செய்வதே தங்களின் முக்கிய நோக்கம்," என்று குறிப்பிட்டார்.

மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து 'பட்டிதர் அனாமத் அன்டோலன் சமிதி' என்ற அமைப்பைச் சேர்ந்த 50 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். விரைவில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளனர். படம்: ஊடகம்