சென்னை: அதிமுக அரசு தொடர்பான எத்தகைய பொய் பிரசாரங்களும் மக்கள் மத்தியில் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். யாராலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார். "தமிழக முதல்வர் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பது தொடர்பில் வெளியாகும் விமர்சனங்கள் விளம்பர நோக்கம் கொண்டவை. "தமிழகத்தை ஆண்டு வரும் அம்மா அதிமுக அரசு, புயல் வேகத்தில் செயல்படுகிறது. தமிழக அரசு குறித்து மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம். ஆனால் அவற்றை மக்கள் ஏற்க மாட்டார்கள்," என்றார் ஜெயக்குமார். எண்ணூர் கடலில் மீன் வளத்தைப் பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்த அவர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கான மீன்பிடித் தடைக் காலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அரசு தொடர்பான பொய் பிரசாரங்கள் எடுபடாது: அமைச்சர் ஜெயக்குமார்
1 mins read
-

