சென்னை: மணல் முறைகேட்டில் சிக்கியுள்ள ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியை தமது நண்பர் என்ற வகையில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசுவதாகவும், பிரதமர் மோடியோ விவசாயிகளைக் கூட சந்திக்க மறுப்பதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையின் பல்வேறு பகுதி களிலும் தற்போது திமுக சார்பில் குளங்களைத் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணி களைப் பார்வையிட்டார் ஸ்டாலின். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளவுபட்டுள்ள அதிமுக அணிகளுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் எழுந் துள்ளதாகவும் அவை தொடர்பாக பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். முதல்வர் பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து பேசியது அரசியல் ரீதியானது என்றும் சாடிய அவர், தமிழகத்தில் கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருவதாகக் கூறினார்.
அதிமுகவில் பிரதமரின் கட்டப் பஞ்சாயத்து பணி: ஸ்டாலின் வருத்தம்
1 mins read
-

