வெளிநாடுகளில் சொத்து குவித்த ஓபிஎஸ்; மோடியின் சதிச் செயலுக்கு உடந்தை: நாஞ்சில் சம்பத்

வெளிநாடுகளில் சொத்து குவித்த ஓபிஎஸ்; மோடியின் சதிச் செயலுக்கு உடந்தை: நாஞ்சில் சம்பத்

1 mins read

தஞ்சை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கிக் குவித்து வைத்துள்ளதாக அதிமுகவின் சசிகலா அணி கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டி உள்ளார். அதிமுகவை உடைத்துவிட வேண்டுமென சிலர் துடிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு நடக்காது என்று தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வரு கின்றனர். நேற்று முன்தினம் தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத் தில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் சதிச் செயல்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் உடந்தையாக இருப்பதாகக் கூறினார். ஓபிஎஸ் தற்போது அதிமுகவை காட்டிக் கொடுத்து விட்டதாகச் சாடிய அவர், இதன் மூலம் எட் டப்பன் வரிசையில் பன்னீர் செல் வத்துக்கு இடம் கிடைத்து இருப் பதாகக் குறிப்பிட்டுள்ளார்.