பிரபல கவிஞர் நா.காமராசன் உடல்நலக் குறைவால் காலமானார்

பிரபல கவிஞர் நா.காமராசன் உடல்நலக் குறைவால் காலமானார்

1 mins read

சென்னை: பிரபல இலக்கியவாதியும் கவிஞருமான நா.காம ராசன் தமது 75ஆவது வயதில் உடல்நலக்குறைவால் கால மானார். அவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். காலஞ்சென்ற முதல்வர் எம்ஜிஆரால் தமிழ்த் திரைத்துறை யில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர் காமராசன். நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். கருப்பு மலர்கள், ஆப்பிள் கனவு, சூரிய காந்தி, தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும், சகாராவின் தாண்டாத ஒட்டகங்கள் உள்பட இவர் எழுதிய பல்வேறு நூல்களும் இலக்கிய ஆர்வலர்களைப் பெரிதும் கவர்ந்தவை. தமிழ் விரிவுரையாளராகவும், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் காமராசன்.