நான்கு பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த கொள்ளையர்கள்; தடுக்க முயன்றவர் சுட்டுக்கொலை

நான்கு பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த கொள்ளையர்கள்; தடுக்க முயன்றவர் சுட்டுக்கொலை

1 mins read

நெடுஞ்சாலையில் காரில் சென்ற போது, காரை வழிமறித்து, அதில் இருந்த நான்கு பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து, நகை களையும் பணத்தையும் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் இந்தியா வின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்தது. ஜேவர் நகரில் வசித்துவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள், இரு குழந்தைகள், இரு ஆடவர்கள் என மொத்தம் எட்டுப் பேர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அதில் ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்பதால் சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

கிரேட்டர் நொய்டா அருகே ஜேவர்=புலந்த்சாகர் நெடுஞ்சாலை யில் அவர்கள் சென்றுகொண்டிருந்த போது ஆறு, ஏழு கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காரை வழிமறித்தனர். துப்பாக்கியால் காரின் ஒரு சக்கரத்தில் சுட்டு, காரை வலுக்கட்டாயமாக நிறுத்தி, அதிலிருந்தவர்களை அவர்கள் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இரு ஆண்களையும் குழந்தை களையும் பிணை பிடித்த கொள்ளை யர்கள், பின்னர் நான்கு பெண்களை யும் மாறி மாறி வன்புணர்ந்ததாகக் கூறப்படுகிறது. பிணை பிடிக்கப்பட்ட ஆடவர் களில் ஒருவரான ஷகீல் குரே‌ஷி என்பவர், அக்கொடூரச் செயலைத் தடுக்க முயன்றபோது, கொள்ளையர் களில் ஒருவன் சுட்டதால் அவர் அவ்விடத்திலேயே மாண்டார்.