சென்னை: தமிழகத்தை அனல் வெயில் வாட்டி வருவதால் பள்ளிக் கூடங்கள் திறப்பதை மாநில அரசு ஒரு வாரம் தள்ளிப்போட் டுள்ளது. பருவ மழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கடுமையான வெயில் கொளுத்துகிறது. குறிப்பாக, சென்னை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரி வெயில் வறுத்தெடுக்கிறது. இத னால், பொதுமக்கள் அவதி யடைந்து வருகின்றனர். மே மாத இறுதிப் பகுதியான தற்போது வரை வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதற்கிடையே, கோடை விடு முறை விடப்பட்ட பள்ளிக்கூடங் கள் ஜூன் 1ஆம் தேதி திறப்பதாக இருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக் கப்படும் தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, "கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படும்," என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன் நேற்று அறிவித்தார். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளி திறக் கப்படும் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, தனியார் பள்ளி களும் ஜூன் 5ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்த குமார் தெரிவித்துள்ளார்.

