இந்தியாவின் மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் அவர் காயமின்றி உயிர்தப்பினார். லாத்தூர் அருகே நிலங்கா எனும் சிற்றூரில் விவசாயிகளுட னான கலந்துரையாடல் நிகழ்ச்சி யில் ஃபட்னாவீஸ் பங்கேற்று விட்டுத் திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது. தானும் தன்னுடன் பயணம் செய்த ஐந்து பேரும் பாதுகாப்பாக இருப்பதாக டுவிட்டர் வழியாக ஃபட்னாவீஸ் தெரிவித்தார். "நாங்கள் வந்த ஹெலிகாப்டர் லாத்தூரில் விபத்துக்குள்ளானது. நானும் என்னுடைய குழுவினரும் எந்தப் பாதிப்பும் அடையாமல், பாதுகாப்பாக இருக்கிறோம். கவ லைப்பட ஒன்றுமில்லை," என்று அவர் கூறினார். அமெரிக்கத் தயாரிப்பான அந்த 'சிகோர்ஸ்கி' வகை ஹெலி காப்டர் மோசமாக சேதமடைந்ததா கவும் இந்த விபத்தில் உயிர்ச் சேதமோ காயமோ ஏற்படாதது அதிசயம்தான் என்றும் அதிகாரி கள் குறிப்பிட்டனர். புறப்பட்ட சற்று நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளதை அறிந்த விமானி, உடனடியாக ஹெலிகாப்டரை அருகிலிருந்த 'ஹெலிபேடில்' தரையிறக்க முற் பட்டார்.
மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவீஸ் லாத்தூரில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டரில் மும்பை திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது. படம்: தி இந்து

