வேல்முருகன்: தமிழர்களுக்கு எதிராக அதிகார பாஜகவின் அதிகார பலம்

வேல்முருகன்: தமிழர்களுக்கு எதிராக அதிகார பாஜகவின் அதிகார பலம்

2 mins read
bd1282de-88b6-45a0-8782-2b94723a7446
-

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மூன்றாண்டு- களைக் கடந்துள்ள நிலையில், அந்த அரசு தன்னை முடியாட்சி அரசாக அறி வித்துக் கொள்ளாதது மட்டுமே எஞ்சியிருப்பதாக தமிழக வாழ்வுரி மைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மத் தி- யில் பாரதிய ஜனதா கட்சி யின் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து மூன்றாண்டுகள் நிறை- வடைந்துள்ளன. நான்காம் ஆண்- டில் அடியெடுத்து வைக்கும் மோடி- யின் இந்த ஆட்சி, பல சாதனைகளைச் செய்திருப்பதாகப் பரப்புரை- களிலும் விளம்பரங்களிலும் மார்- தட்டிக்கொண்டுள்ளது.

"ஆனால் இது ஏற்புடையது தானா என்று உரசிப் பார்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உள்ளது. அதிலும் தமிழர்களாகிய நமக்கு மோடியின் ஆட்சியைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றே ஆகியிருக்கிறது," என்று கூறியுள்- ளார் வேல்முருகன். "ஏனெனில் மூன்றாண்டு கால ஆட்சியில் மோடி தன் அதிகார பலம் முழுவதையும் தமிழர்களுக்கு எதிராகவே திருப்பினார். "மக்களாட்சி நெறிகளுக்கு மாறாக முடியாட்சி - என்றே சொல்லும்படியாக சர்வாதிகார நடவடிக் கைகளையே தமிழகத்தில் அவர் மேற்கொண்டார். பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி நாடு இந்தியா.

பல மொழி, இன மாநிலங்கள்தான் இந்தியாவே தவிர, இந்தியா என்ற வெறும் பெயரின் அதிகாரத்திற்- குட்பட்டவை அல்ல மாநிலங்கள். ஆனால் இந்தப் பன்மைத்துவத்தை ஏற்காத பாசிச மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறார் மோடி. அதனால்தான் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதாக வழக்கொழிந்து போன சமஸ்கிருத மொழியையும் அதன் வழிப்பட்ட பழமைவாத பிற்போக்குக் கலா- சாரத்தையும் மற்ற மொழியினர் மீது திணிக்கிறார். "அதன் மூலம் இந்தியச் சமூகத் தில் மதவாத, வகுப்புவாத பிளவு களை மேலும் அ தி க ப் ப டு த் து கி றா ர் , அகலப்படுத்துகிறார். மோதல்களை- யும் சாதல்களையும் உண்டு- பண்ணுகிறார், உறுதிப்படுத்து- கிறார். இதனை இலக்காகக் கொண்டுதான் மாநில உரிமை- களை ஒவ்வொன்றாகப் பறித்துக் கொண்டிருக்கிறார்," என்றார். தமிழகத்திற்குத் தீங்கு விளை- விக் கும் திட்டங்களாகப் பார்த்துத் திணித்துக்கொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அனைத்து நதி- களுக் கு மாக ஒற்றைத் தீர்ப்- பாயத்தை அமைக்க முனைகிறார் என்றார்.