ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு

ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு

1 mins read
20c88e43-98ed-4a32-9391-25b2d0fa3dd7
-

சென்னை: ஜெனிவாவில், ஜூன் 12ஆம் தேதி தொடங்க உள்ள மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்- பட்டுள்ளது. இதில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் ஜெனிவாவுக்கு அடுத்த மாதம் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நாவின் 35வது மனித உரிமைகள் மாநாடு, ஜெனிவாவில் ஜூன் 12ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும்.