முன்னாள் அதிமுக அமைச்சர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு

முன்னாள் அதிமுக அமைச்சர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு

1 mins read

திருச்சி: முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த சொத்துச் சந்தை உரிமையாளர் லோகநாதன், 55, கடந்த மாதம் திருச்சி நீதி மன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், 2015 ஜூன் மாதம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், அப்போதைய மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனின் 'பினாமி' என்று கூறிக்கொண்டு, சூரிய ஒளி மின்சக்தித் தகடுகளை நிறுவ 200 ஏக்கர் நிலம் வாங்கித் தரும்படி தன்னிடம் கேட்டதாக திரு லோகநாதன் கூறியுள்ளார். முன்பணமாக காமராஜ் 20 லட்ச ரூபாய் கொடுத்ததால் அவர் மீது நம்பிக்கை வைத்து,

தன்னி டமிருந்த 50 ஏக்கர் நிலத்தையும் அக்கம்பக்க நில உரிமையாளர் களிடம் பேசி மேலும் 151 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களையும் பெற்றுத் தந்ததாகக் கூறிய திரு லோகநாதன், அதற்காகத் தான் ரூ.50 லட்சம் செலவழித்துள்ள தாகவும் சொன்னார். சிறிது நாட்களுக்குப் பின் அவரை ஓரங்கட்டிவிட்டு காமராஜே நில உரிமையாளர்களிடம் பேசத் தொடங்கினார். எப்படி இருந்தால் என்ன, தன் பணம் தனக்கு வந்தால் சரி என்று கருதி, முதலில் தந்த ரூ.20 லட்சம் போக மீதி 30 லட்ச ரூபாயைத் தருமாறு காம ராஜிடம் திரு லோகநாதன் கேட் டார். ஆனால், பணத்தைத் தராத துடன் உரிய பதிலையும் அவர்கள் கூறவில்லை என்றார் திரு லோக நாதன்.