இந்தியத் தலைநகரில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தவர்களைத் தட்டிக்கேட்டவர் கொலை

1 mins read

ஆட்டோ ஓட்டுநர் கொலை; கல்லூரி மாணவர்கள் கைது புதுடெல்லி: ஆட்டோ நிறுத்தம் அருகில் சிறுநீர் கழித்தவர்களைத் தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். மது அருந்திவிட்டு வந்த அந்த இருவரும் டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருந்த ஆட் டோ நிறுத்தத்தில் சிறுநீர் கழித்து உள்ளனர். அதைக் கண்ட ஆட்டோ ஓட்டு நர் ரவீந்தர் குமார் (படம்) அங்கு சிறுநீர் கழிக்கக்கூடாது என அவர்களைக் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர் கள் இருவரும், 'உன்னை பிறகு பார்த்துக் கொள்கிறோம்' என்று கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அந்த இருவரும் இரவு 8 மணியளவில் சுமார் 10 பேருடன் வந்துள்ளனர். அந்தக் கும்பல் ஆட்டோ ஓட்டுநர் ரவீந்தரைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. அதன்பிறகு வீடு திரும்பிய அவர், திடீரென்று உடல்நலம் குன்றினார். அதன்பிறகு மருத்துவ மனைக்குச் சென்ற ரவீந்தர், செல் லும் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலிசார், அந்தப் பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 12 முதல் 13 இளைஞர் கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளதாகவும் அவர்கள் மது போதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.