கோவை: தனியார் மருத்துவமனை யின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரண மாக கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத் துவமனையில் இருந்து நோயாளி களும், அவரது உறவினர்களும் அவசர மாக வெளியேற்றப்பட்டனர். அக்குறிப்பிட்ட மருத்துவமனையில் குடல், கல்லீரல், கணையம் தொடர்பான சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் இம்மருத்துவ மனையில் தினந்தோறும் பல்வேறு அறுவை சிகிச்சைகள் நடைபெறு வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் இம்மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சைப் பிரிவில் திடீரென தீ மூண்டது.
மின்சாரக் கருவி ஒன்றில் இருந்து வெளிப் பட்ட தீப்பொறி, அப்பிரிவில் இருந்த மருத்துவக் கழிவுகள் மீது பட்ட தன் காரணமாக தீ பெரிதாகி மளமளவெனப் பரவியது. இதையடுத்து மருத்துவமனையின் ஊழியர்கள் தீயை அணைக்கப் போராடினர். அதற்குள் குளிர்சாதன வசதிக்காக பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் தீப்பற்றி பெரும் புகை மூண்டது. அது அக்குழாய்களின் வழியே இதர அறைகளுக்கும், தளங்களுக்கும் வேகமாகப் பரவியதால் நோயாளிகள் மூச்சுத் திணறலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. 4 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினரும் மருத்துவமனை ஊழியர்களும் தீயை அணைத்ததுடன், நோயாளிகளையும் பத்திரமாக வெளியேற்றினர். நல்ல வேளையாக, இத்தீவிபத் தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், லேசாகப் பாதிக்கப்பட்டவர் களுக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

