சென்னை: மக்களுக்குப் பிடிக்காத எதையும் அதிமுக வலிய திணிக்காது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், அதி முகவினர் யாருக்காகவும் பயந்து செயல்படவில்லை என்றார். "மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டுமே அதிமுக அரசு செய்து வருகிறது. மக்களுக்குப் பிடிக்காததைச் செய்யமாட்டோம். "அதிமுகவுக்கு என தனித்துவம் உண்டு. யாருடைய கைப்பாவையாகவும், நாங்கள் செயல்படவில்லை. திமுகவுக்கு வேண்டுமானால் அத்தகைய அனுபவம் இருக்கக்கூடும்," என்றார் தம்பிதுரை. ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எக்காரணத்தை முன்னிட்டும் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது என்றார்.
மக்களுக்குப் பிடிக்காததை அதிமுக அரசு செய்யாது: தம்பிதுரை உறுதி
1 mins read

