ஆக்ரா: பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை நல்ல விதத்தில் ஆளாக்க விரும்பிய தாய் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்க முன்வந்துள்ளார். தாய் ஆர்த்தி சர்மாவுக்கு நான்கு பிள்ளைகள். இதில் மூன்று பெண் குழந்தைகள். அனைவரும் பள்ளியில் படிக்கிறார்கள். தனது குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு நிதி உதவி எதுவும் கிடைக்காத காரணத்தால் தனது சிறுநீரகத்தை ஃபேஸ்புக் பக்கத் தில் விற்பனை செய்ய உள்ள தாகப் பதிவிட்டுள்ளார். குவாலியர் சாலையில் உள்ள ரோஹாடாவில் உள்ள ஈகோ காலணியில் வாடகை வீட்டில் எட்டு குடும்ப உறுப்பினர்களுடன் இவர் வசித்து வருகிறார். கையால் எழுதப்பட்ட கடிதத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆர்த்தி பதிவிட்டுள்ளார். தனது சிறுநீரகத்தை யாரேனும் வாங்கிக் கொண்டால்தான் தனது குழந்தை களால் படிப்பைத் தொடரமுடியும் எனவும் பிள்ளைகளின் படிப்புக் காக உதவி கேட்டு கெஞ்சியுள்ளார். தனது கணவர் மனோஜ் சர்மா உதவியுடன் சிறிய துணிக்கடையை நடத்திவந்தார் ஆர்த்தி சர்மா. ஆடைத் தொழிலில் கிடைத்து வந்த வருமானம் மூலம் குழந்தை களை படிக்க வைத்து வந்தார். கடந்த சில மாதங்களாக தொழில் நலிவடைந்துவிட்டதால் வருமானத் துக்கு வழியில்லாமல் திண்டாடினார்.
நான்கு குழந்தைகளைப் படிக்கவைக்க ஃபேஸ்புக்கில் சிறுநீரகத்தை விற்கும் தாய்
1 mins read
-

