பூசாரி மீது சோடாபோத்தல் வீச்சு, போலிஸ் கையைக் கடித்துவிட்டு ஓட்டம்

பூசாரி மீது சோடாபோத்தல் வீச்சு, போலிஸ் கையைக் கடித்துவிட்டு ஓட்டம்

1 mins read

விருதுநகர்: கோயில் பூசாரி மீது சோடா பாட்டில் வீசியவர்களைப் பிடிக்கச் சென்ற போலிஸ் அதிகாரி கையைக் கடித்த நபரை போலிஸ் தேடுகிறது. மதுரை கபீர் நகரைச் சேர்ந்த காளிதாஸ், 25, என்பவர் விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் காளியம்மன் கோயில் பூசாரி பாலமுருகன் மகள் மீனாவைப் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். மதுரையில் வாழ்ந்து வரும் இவர்கள், ஆவுடையாபுரம் காளியம்மன் கோயில் விழாவுக்கு வந்தனர்.

விழாவுக்குச் சென்ற காளிதாஸ் அண்ணன் ராஜேந்திர பிரசாத், காளிதாஸுக்கு விபூதி கொடுக்கப்போனபோது அவரை பூசாரி பாலமுருகன் தடுத்தார். இதனால் கோபமடைந்த சகோதரர்கள், அன்று மார்ச் 31ஆம் தேதி மாலையில் அக்னிசட்டி எடுக்க பாலமுருகன் நடந்து சென்றபோது சோடா போத்தல்களை எடுத்து வீசினர்.

கோயில் பாதுகாப்பில் இருந்த வச்சக்காரப்பட்டி போலிஸ் அதிகாரி சகோதரர்களைப் பிடிக்கப் போனபோது அவரின் கையை ராஜேந்திர பிரசாத் கடித்தார். காளிதாஸ் அவரை கீழே தள்ளிவிட்டார். பிறகு இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.