குடிக்க தண்ணீர் கிடைக்காததால் கோபம்; காட்டு யானை தாகத்துக்கு நால்வர் பலி

குடிக்க தண்ணீர் கிடைக்காததால் கோபம்; காட்டு யானை தாகத்துக்கு நால்வர் பலி

1 mins read

கோவை: கோவையை அடுத்த போத்தனூர் அருகே கணேசபுரத் தில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த யானை குடிக்க தண்ணீர் கிடைக் காததால் கோபமடைந்து நால் வரைத் தாக்கிக் கொன்றது. வறட்சி காரணமாக யானைகள் திடீர்திடீரென்று கிராமங்களில் நுழைந்து வருவதால் அப்பகுதி மக்கள் பயந்துபோய் வீட்டுக்குள் ளேயே இருக்கிறார்கள். கோவைப் புதூர், கணேசபுரம், மைல்கல், மதுக்கரை, எட்டிமடை உள்ளிட்ட பகுதிகளில் வறட்சி காரணமாக காட்டு யானைகள் ஊடுருவல் அதிகரித்துவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த சிறுமி காயத்ரி, 12, வனப்பகுதிக்குச் சென்ற பழனிச் சாமி, வெள்ளலூர் ரைஸ்மில் பகுதியில் கழிவறைக்குச் சென்று கொண்டிருந்த ஜோதிமணி, நாகரத்தினம் ஆகிய நால்வரையும் யானை தூக்கிப்போட்டு மிதித்தது. இதனால் அவர்கள் உயிர் இழந்த னர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வெள்ளலூர் பகுதி மக்கள் எச்சரிக் கப்பட்டு உள்ளனர்.