காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்; தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மரணம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்; தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மரணம்

1 mins read

ஜம்மு: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீர மரணம் அடைந்தனர். நேற்று முன்தினம் ஜம்மு, ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தாக்குதல் நடைபெற்றது. அப்போது அவ்வழியே சென்ற ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் உட்பட ராணுவத் தரப்பில் இரு வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த சில தினங்களாக இந்திய எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி வருவதால் இந்திய ராணுவம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதலும் நடத்தியது. இதில் பாகிஸ்தான் தரப்பில் 5 வீரர்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே எல்லையில் ஊடுருபவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படும் என இந்திய ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.