சீமான் மீண்டும் வலியுறுத்து: தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும்

சீமான் மீண்டும் வலியுறுத்து: தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும்

1 mins read
b58af4db-081c-421a-88d6-8a4937120534
-

திருவாடானை: தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்று 'நாம் தமிழர் கட்சி' தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானையில் நடந்த கட்சி யின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சீமான், "தமிழன்தான் ஆள வேண்டும்," என்று குறிப்பிட்டார். "ஒட்டு மொத்த தமிழர்களும் சேர்ந்து ஒரு தமிழனை ஆட்சி செய்ய வைக்கமுடியும். யார் வேண்டுமானாலும் இந்த நிலத்தில் வாழலாம். ஆனால் இந்த நிலத் தைத் தமிழன்தான் ஆளமுடியும். "தமிழக இளைஞர்கள் அர சியல் படிக்க வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளாகக் கத்தினேன்.

ஆனால் பணம் வாங்கிக்கொண்டு தான் தமிழக மக்கள் வாக்களித் தார்கள். "அரசியல் என்பது வாழ்வியல். அரசியல் வேண்டாம் என நீங்கள் விலகி நின்றால் நாம் யாரை வெறுக்கிறோமோ அவர் தலைமை யிலான ஆட்சியின்கீழ்த்தான் வாழவேண்டியிருக்கும். "மிகப்பெரிய கனவுகளோடு நாம் தமிழர் கட்சி தமிழக மக் களுக்காகப் போராடி வருகிறது. "நாம் தமிழர் கட்சியின் தத்து வங்களை வைத்து ஒருநாள் ஆட்சியை நடத்துவார்கள். தமி ழனும் தமிழும் 50,000 ஆண்டு களுக்கு மூத்தவர்கள் என உலக அறிஞர்களும் நம் முன்னோர்களும் சொல்லிச் சென்றுள்ளனர். "தமிழ்நாட்டை சாதியால் ஆள முடியாது," என்று சீமான் கூறினார். மேலும் பேசிய அவர், "இந்த நிலத்தைத் தமிழன்தான் ஆள முடியும்," என்றார்.