ஒடிசாவில் வெயிலுக்கு 16 பேர் பலி: குஜராத், ராஜஸ்தானிலும் கடும் பாதிப்பு

ஒடிசாவில் வெயிலுக்கு 16 பேர் பலி: குஜராத், ராஜஸ்தானிலும் கடும் பாதிப்பு

2 mins read

புதுடெல்லி: ஒடிசாவில் வெயில் கொடுமை தாங்கமுடியாமல் 16 பேரும் குஜராத்தில் இருவரும் உயிர் இழந்துள்ளனர். அத்துடன் ராஜஸ்தான் மாநிலத்தில் வெயி லால் பாதிக்கப்பட்ட பலரும் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். தென்மேற்குப் பருவ மழை தொடங்கி பல மாநிலங்களிலும் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வடமாநிலங்கள் பலவற்றில் இன்னும் வெயில் உச்ச கட்டத் திலேயே உள்ளது. ஒடிசாவில் வெயில் கொடுமை தாங்கமுடியாமல் 16 பேரும் குஜராத்தில் இருவரும் உயிர் இழந்துள்ளனர். ஒடிசாவில் ஏற்கெனவே வெயில் தாங்கமுடியாமல் 100 பேர் உயிர் இழந்து இருந்தனர்.

இன்னும் அதே அளவிலேயே வெயிலின் நிலைமை நீடிப்பதால் உயிர் இழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. குஜராத்தில் வெயிலால் பாதிக் கப்பட்டு கடந்த மாதம் மட்டும் 10,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இன்னும் அதே நிலை நீடிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இதுவரை வெயிலுக்கு 6 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிர் இழந்துள் ளனர். இந்த மாநிலத்தின் சில பகுதி களில் மழை பெய்து வரும் நிலை யிலும் பல மாவட்டங்களில் வெயில் இன்னும் அதே நிலையில் தான் உள்ளது. அதிகபட்சமாக பண்டல்கண்ட் மாவட்டத்தில் 116.6 டிகிரி வெயில் நேற்று கொளுத்தியது.

இதேபோல் பண்டா, மகோபா மாவட்டத்திலும் வெயில் நிலைமை மோசமாக இருந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் வெயி லின் அளவு மோசமாக உள்ளது. ஜெய்ப்பூர், மிகேனர், ஜெய்சல்மார் மாவட்டங்களில் மிக அதிக பட்சமாக வெயில் உள்ளது. நேற்று 106 டிகிரியில் இருந்து 107 டிகிரி வரை வெப்ப நிலை இருந்தது. கடந்த ஞாயிறன்று 116 டிகிரி வரை வெப்பம் இருந்தது. டெல்லியைப் பொறுத்தவரை வெப்பம் சற்று தணிந்துள்ளது. அங்கு நேற்று வெப்பநிலை 93 டிகிரியாக பதிவாகி உள்ளது.