தெலுங்கானாவில் ஹைதராபாத்-வாரங்கால் தேசிய நெடுஞ்சாலையில் லிங்கம் இருப்பதாக மக்களை நம்பவைத்து 15 அடிக்குப் பெரிய பள்ளம் தோண்டிய சிவபக்தரும் அவருக்கு உடந்தையாக இருந்த பஞ் சாயத்து தலைவரும் கைது செய்யப்பட்டனர். ஜான்கான் மாவட்டம், பெம்பார்தி கிராமப் பகுதி யில் ஹைதராபாத்-வாரங்கால் தேசிய நெடுஞ்சாலை யில் பூமிக்கு அடியில் சிவலிங்கம் மண்ணிற்குள் புதைந்து இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த சிவபக்தர் லாகான் மனோஜ் (வயது 30) கூறியுள்ளார்.
கனவில் கடவுள் சிவன் வந்து அப்பகுதியில் லிங்கம் புதைந்து கிடப்பதாகவும் அதை எடுத்துக் கோவில் கட்டி வழிபடுமாறும் கூறியதாக லாகான் மனோஜ் கூறியுள்ளார். இதையடுத்து நெடுஞ்சாலையில் ஊர் மக்களும் இணைந்து பள்ளம் தோண்டும் பணியைத் துரிதப் படுத்தினர். தோண்டத் தோண்ட மண்ணைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை.
இருப்பினும் மனோஜ் அவ்வப்போது சாமி வந்தது போல், "தோண்டுங்கள், விரைவில் சிவலிங்கம் கிடைக் கும்," என்று கூறிக்கொண்டே இருந்துள்ளார். 15 அடி ஆழத்திற்கு பெரிய குழியாக வெட்டிய பிறகும் லிங்கம் கிடைக்கவில்லை. இதற்கிடையே சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க கைதாகினர்.

