தமிழக அரசு மோடியிடம் மண்டியிட்டுக் கிடப்பது தமிழகத் துக்கே அவமானம் - முத்தரசன்

தமிழக அரசு மோடியிடம் மண்டியிட்டுக் கிடப்பது தமிழகத் துக்கே அவமானம் - முத்தரசன்

1 mins read
0cb0ba86-30db-4308-bd59-44c473e5d906
-

சென்னை: மாட்டிறைச்சிக்கு எதி ரான மத்திய அரசின் உத்தரவை ஏற்கவே இயலாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் அக்கட்சி சார்பில் நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திரு முத்தரசன், மத்திய அரசின் உத்தரவு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் தமிழக அரசு மௌனமாக இருப்பது சரியல்ல என்றார். மேலும் மத்திய, மாநில அரசு களின் செயல்பாட்டையும் அவர் மிகக் கடுமையாகச் சாடினார். "தமிழக அரசு மோடியிடம் மண்டியிட்டுக் கிடப்பது தமிழகத் துக்கே அவமானம்.

மத்திய அரசு தனது உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். இல்லை யென்றால் நாடு முழுவதும் மத்திய அரசின் தடை உத்தரவை மீறு வோம்," என்றார் முத்தரசன். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மாட்டிறைச்சி தொடர்பான தடையை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும், ஐஐடி மாணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப் பட்டன. "மாட்டிறைச்சி தொடர்பான தடைக்கு நாடு முழுவதும் பரவ லாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில் மக்க ளின் உணர்வுகளை மதிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. "ஆனால் தமிழக அரசு தனது கடமையை நிறைவேற்றாமல் மௌனம் காத்து வருகிறது," என்றும் முத்தரசன் சாடினார்.