குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்ற மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகராவ் தெரிவித்துள்ளார். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மதுரையில் கையெழுத்து இயக்கம் ஒன்றை அவர் துவங்கி வைத்துள்ளார். குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளர் உள்ளிட்ட விதிமீறல்களால் பாதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். படம்: தகவல் ஊடகம்
குழந்தைகளின் நலன் காக்க கையெழுத்து இயக்கம்
1 mins read
-

