வறட்சியின் உச்சத்தில் ராமநாதபுரம் தண்ணீரின்றி கால்நடைகள் தவிப்பு

வறட்சியின் உச்சத்தில் ராமநாதபுரம் தண்ணீரின்றி கால்நடைகள் தவிப்பு

1 mins read
9fda51ab-682f-4463-b500-1b6419ec8f3c
-

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட் டத் தில் நீர்நிலைகள் வறண்டதால் கால்நடைகள் தண்ணீரின்றித் தவிக் கின்றன. தினமும் தண்ணீ ரைத் தேடி பல கி.மீ. தூரம் கால்நடை களை ஓட்டிச்செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள் ளது. பருவ மழை பொய்த்ததால் அந்த மாவட்டத்தில் கண் மாய், குளங் கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன. தற்போது கோடை மழை யும் பெய்யாததால் விவசாயி களும் கால்நடை வளர்ப் போரும் மிகவும் சிரமப்படுகின்றனர். ஒன்று, இரண்டு மாடு அல்லது ஆடுகள் வளர்ப்போர் வீடுகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி வைத்தோ, நிலத்தடி நீரைப் பயன் படுத்தியோ கால்நடைகளைப் காப்பாற்றுகின்றனர்.

ஆனால் மாடு, ஆட்டு மந்தை வைத்திருப்போரின் நிலைமை மோசமாக உள்ளது. பசும் புல் இல்லாமல், கருகிக் கிடக்கும் புற்களை மேயும் மாடு கள் தண்ணீரைத் தேடி அலை கின்றன. ராமநாதபுரம் அருகே சக்கரக் கோட்டை கண்மாயில் வறட்சி காலத்திலும் சிறிதளவாவது நீர்தேங்கிக் கிடக்கும். ஆனால், இந்த ஆண்டு இக்கண்மாய் முற் றிலும் வறண்ட நிலையில் காணப் படுகிறது. தற்போது, கண்மாயில் கீழக் கரை சாலையோரம் ஒரு பள்ளத் தில் காவிரிக் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கியுள் ளது. இந்த தண்ணீரை ஆர்.எஸ். மடை, அம்மன்கோயில், பால்கரை, அச்சடிப்பிரம்பு, புத்தேந்தல், கூரி யூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் கால்நடைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.