பெண்களுக்கான பாதுகாப்பு: நடிகை வரலட்சுமி கோரிக்கை

பெண்களுக்கான பாதுகாப்பு: நடிகை வரலட்சுமி கோரிக்கை

1 mins read
d1b7d2e1-dbca-479c-9503-ecf5ef8d281b
-

சென்னை: பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை வரலட்சுமி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அவர், தமிழகத்தில் மகளிர் நீதிமன்றங்களை அதிக அளவில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

"பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொண்டேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்," என்றார் வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான இவர் 'சேவ் சக்தி' என்ற பெயரில் பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கியுள்ளார்.