புதுடெல்லி: தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம் பியுள்ள நிலையில், 'நீட்' தேர்வுக்கான முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வு கடந்த மாதம் 24ஆம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு மொழிகளில் இத்தேர்வை எழுதினர். இதனால் சர்ச்சை வெடித்தது. ஆங்கிலம், தமிழ் மொழிகளில் அமைந்த வினாத்தாள்களில் பெரியள வில் வேறுபாடுகள் இருந்த தாகக் கூறப்பட்டது. எனவே இத்தகைய தேர்வு முறையை ஏற்க இயலாது எனப் பலர் குரல் எழுப்பினர். இதையடுத்து 'நீட்' தேர்வு செல்லாது என அறிவிக்கக் கோரியும் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கக் கோரியும் உயர் நீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்யப் பட்டது.
இதையேற்று நீதிமன்றமும் தேர்வு முடிவு களை வெளியிட இடைக் கால தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தேர்வை நடத்திய 'சிபிஎஸ்இ' உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அம்மனு மீதான விசாரணை நேற்று நடை பெற்றது. இருதரப்பு வாதங்களை செவிமடுத்த உச்சநீதிமன்றம், 'நீட்' தேர்வு முடிவுகளை வெளி யிட அனுமதி அளித்துள் ளது. இதனால் 'நீட்' தேர்வை தொடக்கம் முதற்கொண்டு எதிர்த்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து 'நீட்' தேர்வு முடிவுகள் இன்று வெளி யாகலாம்.

