ஜெய்ப்பூர்: பசுக் காவலர்கள் பலரால் தமிழக கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நால்வர் கைதாகியுள்ளனர். தமிழக அதிகாரிகள் நல்ல ரக பசுமாடுகள் வாங்கவே ராஜஸ்தான் சென்றிருந்தனர். அங்குள்ள ஜெய்சல்மீர் பகுதியில் பசுக்களை வாங்கிய பின்னர் தமிழகம் திரும்ப தயாராகினர். எனினும் இத்தகவலை முழுமையாக அறியாத பசுக் காவலர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர், தமிழக அதிகாரிகளைத் திடீரென வழிமறித்து தாக்கியுள்ளனர். மேலும் பசு, கன்றுகளை ஏற்றிச் சென்ற லாரிக்கும் அவர்கள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக அதிகாரிகள் புகார் அளித்ததன் அடிப்படையில் 4 பேர் மட்டும் ராஜஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அதிகாரிகள் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் சிலருக்கு காவல்துறை வலைவீசியுள்ளது.
பசு மாடுகள் வாங்கச் சென்ற தமிழக அதிகாரிகள் மீது கடும் தாக்குதல்
1 mins read

