சென்னை: விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 16 வள்ளுவர் சிலைகள் திறக்கப்படும் எனத் தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு சிலையும் ரூ.1.50 லட்சம் மதிப்புடையது என்றார். "ஏற்கெனவே 8 சிலைகள் இலங்கையின் தென் மாகாணங்களில் திறக்கப்பட்டுவிட்டது. வடக்கு, வடமேற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் வரும் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மேலும் 8 சிலைகள் திறக்கப்பட உள்ளன," என்றார் சந்தோஷம். இதற்காக தனது தலைமையில் நீதிபதிகள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் என 30 பேர் கொண்ட குழு இலங்கை செல்ல இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், 22ஆம் தேதி கொழும்பில் நடக்கும் சிலை திறப்பு விழாவில் அந்நாட்டு அமைச்சர்கள், சபாநாயகர் உள்ளிட்டோர் பங்கேற்பதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் மேலும் 8 வள்ளுவர் சிலைகள்: தமிழ்ச்சங்கம் ஏற்பாடு
1 mins read

