ரூ.36 கோடி போதைப் பொருளுடன் கொலம்பியா நாட்டவர் பிடிபட்டார்

ரூ.36 கோடி போதைப் பொருளுடன் கொலம்பியா நாட்டவர் பிடிபட்டார்

1 mins read

மும்பை: ரூ.36 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் கொலம் பியா நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் மும்பையில் கைது செய்யப் பட்டுள்ளார். மும்பையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வெளி நாட்டுக்காரர் ஒருவர் அதிக அளவு போதைப்பொருளுடன் தங்கி இருப்பதாக காவல்துறை யினருக்குத் தகவல் கிடைக்க, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அந்த வெளிநாட்டுக் காரர் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தினர். அந்த அறையில் 12 பாக் கெட்டுகளில் 'கோகைன்' என்ற போதைப்பொருள் இருந்ததைக் கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்தனர். அந்தப் போதைப்பொருள் 6 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அதன் மதிப்பு ரூ.36 கோடி.

விசாரணையில், அவர் கொலம்பியா நாட்டைச் சேர்ந் தவர் என்றும் அவரது பெயர் பிரிடி ரெண்டீரியா என்பதும் தெரிய வந்தது. 32 வயதாகும் அவர், இதற்கு முன்பாக இரு முறை மும்பைக்குப் போதைப் பொருள் கடத்தி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அந்தப் போதைப் பொருளை யாரிடம் கொடுக்க அவர் காத்திருந்தார் என்பது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.