8 நடிகர்கள் மீதான அவதூறு வழக்கு விசாரணை: தடை விதித்தது உயர் நீதிமன்றம்

8 நடிகர்கள் மீதான அவதூறு வழக்கு விசாரணை: தடை விதித்தது உயர் நீதிமன்றம்

2 mins read

சென்னை: செய்தியாளர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எட்டு திரைப்பட நடிகர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் விசார ணைக்கு உயர் நீதிமன்றம் இடைக் கால தடை விதித்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு பிரபல நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைதானார். அதுகுறித்து பல்வேறு ஊடகங்க ளில் பரபரப்புச் செய்தி வெளி யானது. இது தமிழ்த் திரையுலகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. திரைப்பட நடிகைகள் குறித்து ஊடகங்களில் தவறான கருத்துகள் பரப்பப்படு வதாக திரையுலகத்தினர் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரையுலகக் கலைஞர் கள் பலரும் ஆவேசமாகப் பேசினர். அச்சமயம் நடிகர்கள் சரத் குமார், சத்யராஜ், சூர்யா, விஜய குமார், விவேக், அருண் விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் செய்தியா ளர்கள் குறித்து காட்டமாக விமர்சித்தனர். இதையடுத்து எட்டு பேர் மீது ஊட்டியைச் சேர்ந்த ரோசாரியோ மரியசூசை என்பவர், ஊட்டி நீதிமன்றத்தில், குற்றவியல் அவ தூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு அண்மையில் விசா ரணைக்கு வந்தது.

அப்போது நடிகர்கள் சூர்யா உட்பட 8 பேரும் நேரில் முன்னிலை யாக நீதிபதி உத்தரவிட்டார். பின் னர் பிடியாணையும் பிறப்பிக்கப் பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர்கள் சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கான மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, ஊட்டி நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி முரளிதரன் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு நீதிபதி தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.