சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீதான குற்றச்சாட்டை சட்ட நடைமுறைப்படி உச்ச நீதிமன் றம் விசாரிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், நீதிபதி கர் ணனைக் கைது செய்ய மேற்கொள் ளப்பட்டு வரும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் விசார ணைக்குப் பின்பே தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டம் எனச் சுட்டிக்காட்டிய அவர், நீதிபதி கர்ணன் விவகாரத்தில் விசாரணையே நடத்தாமல் தண் டனை வழங்கப்பட்டுள்ளது என் றார்.
இது நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று என்று குறிப்பிட்ட திருமா, அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி இது போன்று உத்தரவு பிறப்பித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றார். இந்தத் தீர்ப்பு தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்ற அச் சம் தங்களுக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். "இந்தத் தீர்ப்பை சாதி ரீதியான பாகுபாடு என்ற அடிப்படையிலேயே பார்க்கிறோம். மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு மட்டுமே 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏற்படுத்தப்படும். இந்த விவகாரத் தில் உச்ச நீதிமன்றம் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதாகவே கருது கிறோம்.
"நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது மனித உரிமை மீறல் ஆகும். ஒருவரது மனநலனை பரிசோதிக்க உத்தரவு பிறப்பிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. நீதித்துறையில் இருந்து வரும் ஊழல், சாதிப் பாகுபாடு குறித்து வெளிப்படையாக புகார் தெரிவித்த ஒரே காரணத் துக்காக நீதிபதி கர்ணன் தண்டிக்கப்பட்டுள்ளார்," என்று திருமாவளவன் தெரிவித்தார். இதையெல்லாம் பார்க்கும்போது ஜனநாயகம் பாதுகாப்பற்ற நிலை யில் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது என்றும் உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்கள் சிலர் அந்நீதிமன்றத்தில் நேரடியாகவே நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறி மனு அளித்ததாகவும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என்றும் திருமாவள வன் மேலும் சுட்டிக்காட்டி உள்ளார்.

