புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ள டெல்லியில் உள்ள டெல்லி பல்கலைக் கழகத்தில் (படம்) தமிழ் விருப்ப மொழியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் ஆர்வலர்களும் சமுதாயத் தலைவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி டெல்லி பல்கலைக் கழகத்தில், ஊடகவியல் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் தமிழை விருப்ப மொழியாகத் தேர்வு செய்துகொள்ளலாம்.
இத் தகவலை அப்பல்கலைக்கழக அனுமதிக் குழுத் தலைவர் மஹ ராஜ் பண்டிட் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழ் மொழியானது இந்தியாவின் தென்மாநிலங்களில் மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலே சியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பேசப்படுவதைச் சுட்டிக்காட்டினார். தமிழ் படித்தால், இந்த நாடு களுக்குச் செல்லும் மாணவர்க ளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே ஊடகவியல் படிப்புக்கு, விருப்ப மொழியாக, தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.
மேலும், மற்றொரு இந்திய மொழியான வங்க மொழியும் டெல்லி பல்கலைக்கழகத்தில் விருப்ப மொழியாக சேர்க்கப் பட்டுள்ளது என்று அவர் தெரி வித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையும் அறிவிப்பும் தமிழ் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. மேலும், இந்தி மொழித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருபவர்களும் இதை வரவேற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

