பட்டமளிப்பு விழாவில் கறுப்பு கவுனுக்குப் பதில் பாரம்பரிய உடை

பட்டமளிப்பு விழாவில் கறுப்பு கவுனுக்குப் பதில் பாரம்பரிய உடை

1 mins read

கான்பூர்: கான்பூர் ஐஐடி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கறுப்புக் கவுன் அணிவதற்குத் தடை விதித்துள்ளது. பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்ட கறுப்புக் கவுன் முறைக்குப் பதிலாக நம்முடைய பாரம்பரிய உடைக ளையே அணிய வேண்டும் என்றும் அதிரடியாகக் கூறியுள் ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றா கும். பொதுவாகவே நம் முன் னோர் கறுப்பு ஆடைகளை நல்ல நாட்களில் சிறப்பு நிகழ்ச்சி களில் போடக்கூடாது என்பர். ஆனால் நாம் கஷ்டப்பட்டு படித்துப் பட்டம் வாங்கும் நிகழ்ச்சிக்குப் பளபளன்னு பட்டாடை உடுத்திச் சென்று விட்டுப் பின்பு அதனை மறைப்பது போல் ஒரு கருப்பு அங்கியைப் போட்டு மறைத்துக் கொண்டு பட்டம் வாங்குவோம். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் கருப்புக் கவுனை மாற்ற கான்பூர் ஐஐடி முடிவு செய் துள்ளது.

பிரிட்டனால் அறிமுகப்படுத் தப்பட்ட கறுப்புக் கவுனுக்கு முற்றுப் புள்ளி வைத்து, பாரம் பரிய உடைகளை ஊக்குவிக்கும் வண்ணம் ஐஐடி கான்பூர் நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கருப்புக் கவுனுக்கு மாற்றாக நம்முடைய பாரம்பரிய உடைக ளான பைஜாமா குர்தா மற்றும் சுடிதார் போன்றவற்றையே அணி ய லாம் என்று கூறியுள்ளது. இதன் பட்டமளிப்பு விழா ஜூன் 15, 16 தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்த விழாவில் டாடாசன்ஸ் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள தமிழர் சந்திர சேகரன் கலந்து கொள்கிறார்.