கத்தார் நாட்டிலிருந்து நாடு திரும்பத் தயாராக இருக்கும் இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசாங்கம் சிறப்பு விமானங்களை அனுப்ப உள்ளது. நாளை மறுதினம் ஜூன் 25 முதல் ஜூலை 8 வரை சிறப்பு விமானங்கள் கத்தார் நாட்டுக்கு அனுப்பப்படு வதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்து உள்ளது. இந்த காலகட்டத்தில் கூடுதல் விமானங் களை அனுப்பி இந்தியர்களை அழைத்து வருவதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்தது.
கத்தாரில் வேலை செய்யும், வசிக்கும் இந்தியரில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் என்ப தால் சிறப்பு விமானங்களில் அம்மாநிலத்தைச் சேர்ந் தோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரம்=தோஹா, தோஹா=கொச்சி, கொச்சி= திருவனந்தபுரம் இடையே 186 இருக்கை களுடன் கூடிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதேபோல மும்பை= தோஹா இடையே 168 இருக்கைகளுடன் கூடிய விமானங்களை இயக்கப்போவதாக ஜெட்ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பது உள்ளிட்ட ஆதரவு வழங்கிவருவதாகக் கூறி கத்தார் நாட்டு டனான உறவை சவூதி அரேபியா, பஹ்ரேன் உள்ளிட்ட ஏழு அரபு நாடுகள் துண்டித்துவிட்டன. இதனால் உணவுப் பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் அங்கு நிலவுகிறது. இருந்தபோதிலும் கத்தாருடன் இந்தியா நல்ல உறவில் உள்ளதால் இந்தியாவிலிருந்து ஏராளமான பொருட்கள் அங்கு அனுப்பப்பட்டு வருகின்றன. சரக்கு விமானங்கள் மூலம் இந்தியப் பொருட்களை கத்தார் வியாபாரிகள் அதிகமாக இறக்குமதி செய்து வருவ தாக செய்திகள் தெரிவிக்கின்றன.

