திடீர் தீ: ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய பயணிகள்

திடீர் தீ: ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய பயணிகள்

1 mins read
7d540fcc-76aa-4ac1-974a-adbe2342fbba
-

தமிழக அரசுப் பேருந்து ஒன்றின் ஓட்டுநர் சாமர்த்தியமாகச் செயல் பட்டதைத் தொடர்ந்து 41 பயணி கள் காப்பாற்றப்பட்டனர். விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் காலை பேருந்து சென்றுகொண்டு இருந் தது. மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்ததை நெருங்கிய வேளையில் பேருந்துக்குள் இருக்கும் எந்திரப் பெட்டியிலிருந்து திடீர் என புகை வந்தது. அதனைத் தொடர்ந்து லேசாக தீப்பொறி கிளம்பியது. நிலைமை மோசமாவதைக் கவனித்த ஓட்டுநர் நீலகண்டன், 45, சட்டென்று பேருந்தை நிறுத்தி னார். பயணிகள் அனைவரும் உடனடியாக இறங்கி ஓடுமாறு அவர் உரக்கக் கத்தினார்.

எல்லாப் பயணிகளும் பத்திர மாக இறங்கி தப்பித்து ஓடுவதற்கு பேருந்தின் நடத்துநர் வி.கலிய பெருமாள், 39, உதவி செய்தார். அடுத்த சில வினாடிகளில் பேருந்துக்குள் தீப்பிடித்து எரிந் தது. ஓட்டுநர் வெளியே குதித்துத் தப்பினார். பின்னர் மளமளவென்று பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து இறுதியில் அப்பேருந்து எலும்புக்கூடுபோல ஆனது. அ ச் சி று ப் பா க் க த் தி லி ரு ந் து தீயணைப்பு மற்றும் மீட்புப் படை யினர் சென்று சேருவதற்குள் பேருந்து முழுமையாக எரிந்துவிட் டதாக மேல்மருவத்தூர் போலிசார் கூறினர்.