சென்னை: இந்தியாவின் முதுகெலும்பாகவும் தூணாகவும் விளங்கிய விவசாயிகள் தற்போது நான்காம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வேதனை தெரிவித்துள்ளார். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டக் களம் காணப்போவதாக தெரிவித்துள்ள அவர், இதற்காக ஜூலை 9ஆம் தேதி புதுடெல்லி செல்ல இருப்பதாக கூறினார். "விவசாயிகளின் நலனுக்காக அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலுக்கு செல்லும் நதிகளை, கிழக்கு நோக்கி திருப்பி விட வேண்டும். "மாடுகளை காப்பாற்ற நினைக்கும் மத்திய அரசு, விவசாயிகளை காப்பாற்ற மறுக்கிறது. விவசாயி நன்றாக இருந்தால்தான் மாடுகளை நன்றாக வளர்க்க முடியும்?," என அய்யாக்கண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.
மீண்டும் டெல்லியில் போராட்டம்: விவசாயி அய்யாக்கண்ணு அறிவிப்பு
1 mins read

