சென்னை: கடந்த சில மாதங்களாக சென்னையில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியினர் சாடியுள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களில் சென்னையில் மட்டும் 420 சங்கிலி, கைபேசி பறிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களைக் குறிவைத்தே சங்கிலிப் பறிப்புத் திருடர்கள் சுற்றி வருகிறார்கள். இதேபோல் முதியவர்களின் கவனத்தை திசை திருப்பி பணம், நகை, கைபேசிகளை சுருட்டுவதும் தெரியவந்துள்ளது. இத்தகைய திருடர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்படுவர் என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை: 6 மாதங்களில் 420 சங்கிலி, கைபேசி பறிப்பு சம்பவங்கள்
27 Jun 2017 - 6:00 am
1 mins read
