சென்னை: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக் கும் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனுக்கும் இடையே யான 'சொற்போர்' நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இருவரும் ஒருவரையொருவர் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசி யும் விமர்சித்தும் வருகின்றனர். இதையடுத்து, தம்மை தரக்குறை வாக விமர்சித்த அமைச்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக வைகைச் செல்வன் எச்சரித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர் கள் மத்தியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வைகைச் செல்வனை 'சீக்கு வந்த பிராய்லர் கோழி', 'அழுகிப்போன தக்காளி' என்று விமர்சித்தார்.
வைகைச் செல்வன் கூலிக்குப் பணம் வாங்கிக்கொண்டு பேசு பவர் என்றும் அவர் சாடினார். எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால்தான் வைகைச் செல்வனிடம் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் பதவியைப் பறித்தார் என்றும் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் களிடம் தெரிவித்தார். "தனியார் நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கெதிராக வைகைச்செல்வன் பேசுகிறார். அவர் சீக்கு வந்த கோழி, அழுகிப்போன தக்காளி. அவை எதற்கும் பயன்படாது. அவர் சொல்வதை நான் ஒரு போதும் ஒரு பொருட்டாக எடுத் துக்கொள்வதில்லை," என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
அமைச்சரின் இந்தப் பேச்சு வைகைச் செல்வனை ஆவேசப் படுத்தி உள்ளது. தனது பதவி பறிபோனது குறித்து தரம் தாழ்ந்த வகையில் பேசிய அமைச்சர் மீது வழக்கு தொடரப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். "என் பொது வாழ்க்கை தொடர்பில் களங்கம் கற்பிக்க முயன்றுள்ளார் அமைச்சர். இதற்குச் சட்டரீதியாக நான் நடவடிக்கை எடுப்பேன். சட்டப்படி அவர் மீது வழக்குத் தொடுப்பேன். முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, அவர் மீதான சட்டரீதியான நடவடிக்கைக்கு ஆதரவு கோருவேன்," என்று வைகைச் செல்வன் மேலும் கூறி இருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன். படம்: ஊடகம்

