பசுக்களைத் தெய்வமாக வழிபடு வதாகக் கூறிக்கொண்டு மனிதர் களைக் கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அண்மைக்காலமாக இந்தியாவில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன் முறைச் சம்பவங்கள் அரங்கேறி வரு கின்றன. இதன் தொடர்பில் இதுவரை எதுவும் கூறாமல் இருந்த மோடி, நேற்று முதன்முறையாக அந்த வன் முறைத் தாக்குதல்களுக்குக் கண்ட னம் தெரிவித்தார். அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோடி, எந்தக் காரணத்திற்காகவும் சட்டத் தைக் கையில் எடுத்துக்கொள்ள தனிமனிதர் எவருக்கும் உரிமை இல்லை என்றார்.
"பசுபக்தி என்ற பெயரில் மனிதர் களைக் கொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய செயல் களை மகாத்மா காந்தி ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். இந்தியாவில் வன்முறைக்கு இடமில்லை. அகிம்சை தேசம் இது," என்று சொன்னார். அதே நேரத்தில், பசுக்கள் பாதுகாக் கப்பட வேண்டும் என்றும் பசுப் பாது காப்புக் குறித்து மகாத்மா காந்தி, ஆச்சார்யா வினோபா பாவே ஆகியோ ரைவிட அதிகமாக யாரும் சொல்லிவிட முடியாது என்றும் அவர் கூறினார். "வன்முறையால் ஒருபோதும் தீர்வு கிட்டாது. எல்லாரும் இணைந்து பணியாற்றுவோம். மகாத்மா காந்தி கனவு நனவாகும்படியான இந்தியாவை உருவாக்குவோம்," என்று மோடி அழைப்பு விடுத்தார்.
பசுவின் பெயரில் மனிதர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்து டெல்லியில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தப்பட்டது. படம்: ஏஎஃப்பி

