ராமதாஸ்: ஜெயலலிதா நினைவிடம் ஊழலின் சின்னமாகப் பார்க்கப்படும்

ராமதாஸ்: ஜெயலலிதா நினைவிடம் ஊழலின் சின்னமாகப் பார்க்கப்படும்

1 mins read

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், இத்தகைய நினைவிடம் ஊழலின் சின்னமாகத்தான் பார்க்கப்படும் என்று கூறினர். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.